திருமணத்திற்கு சென்ற பேருந்து எதிரே வந்த லாரியில் மோதி விபத்து.., 6 பேர் பலி
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஹாபூர் பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
திருமணம் வீட்டிற்கு சென்றவர்கள், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, வாகனம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மணமகனின் தந்தை மற்றும் பேருந்து டிரைவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்த நிலையில், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil