பாகிஸ்தானில் ஓடும் பேருந்தில் குண்டுவெடிப்பு..13 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில், அணை கட்டுமானப் பணியில் சீனா பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதியானது ஆப்கன் எல்லையில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகத்தை இணைக்கக் கூடியது.
இங்கு அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட சீனாவின் 30 பொறியாளர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.
இதில் 2 பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரும் அடக்கம். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது