தமிழகத்தில் நாளை பேருந்துகள்,ஆட்டோக்கள் ஓடாது..!

Bus Strike Tamilnadu Auto
By Thahir Mar 27, 2022 05:56 PM GMT
Report

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாளை பேருந்துகள்,ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மார்ச் 28,29 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது,

முறைசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும், நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் பங்கேற்கிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் நாளை அரசுப் பேருந்துகள்,ஆட்டோக்கள்,கால் டாக்சிகள் ஓடாது என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.