பேருந்தின் படிக்கட்டில் தொங்கி சென்ற மாணவன்... - ஒரு நொடியில் நடந்த விபரீதம்...!

Accident
By Nandhini Aug 01, 2022 02:07 PM GMT
Report

பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் 

நெல்லை சந்திப்பில் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வீரவநல்லூர் செல்லும் அரசு பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தினமும் தொங்கிக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நெல்லை ஸ்ரீபுரம் டவுன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற மாணவர் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

பேருந்து சென்றுக்கொண்டிருக்கும்போது, கால் தவறி அவர் கீழே விழுந்துள்ளார். அவர் தவறி விழும்போது, சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

bus accident - student

வைரலாகும் வீடியோ

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கு செல்லும்போது பேருந்தில் மாணவர்கள் அதிக அளவில் படியில் தொங்கி கொண்டு சென்றதால் இப்படிதான் விபத்து ஏற்படும் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.