சென்னை அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து - நான்கு பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை வேப்பஞ்சேரியில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த இராமாபுரம் கிராமத்தை சேர்ந்த நபர்கள், கல்பாக்கம் பகுதியில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பேருந்தில் சென்றபோது, கூவத்தூர் அடுத்த காத்தான் கடை பகுதியில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 6 நபர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கூவத்தூர் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

