கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து - 15 பேர் பலி
turkey
bus accident
By Petchi Avudaiappan
துருக்கியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் பாலிகேசிர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முழுமையாக சேதமடைந்தது.
மேலும் இந்த விபத்தில் 15 பேர் பலியான நிலையில், 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை பாலிகேசிர் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகினர். இதனால் துருக்கி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.