பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த தமிழக அரசு அனுமதி

corona ban law
By Jon Feb 20, 2021 06:00 AM GMT
Report

குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதமாக கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது 24 – 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே ஏசி வசதியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியினை பள்ளி, கல்லூரிகள் , தொழிற்சாலைகளுக்கு இயங்கும் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏ.சி. பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

2020 மார்ச் 25 முதல் 702 ஏசி அரசு பேருந்துகள் இயங்காததால் வருவாய் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மீண்டும் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.