ஊருக்கு போக ஒளவை சண்முகியாக மாறிய கணவர் : ஆனால் நடந்தது?

airport indonesia burqua
By Irumporai Jul 23, 2021 12:48 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் தன் மனைவியின் பாஸ்போர்ட்டை காட்டி பர்தா உடை அணிந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளது இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர், பர்தா அணிந்து விமான நிலையம் வந்திருக்கிறார்.

மேலும் அவரது மனைவியுடைய பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அவரின் மனைவிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் காட்டியுள்ளார்.

எனவே விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். விமானம் நடுவானில் சென்ற போது திடீரென்று பர்தாவை கழற்றிவிட்டார்.

இதனை பார்த்த விமான குழுவினரும், பயணிகளும் அதிர்ந்துவிட்டனர். விமானத்தில் ஏறும்போது பெண்ணாக இருந்தார். தற்போது ஆணாக மாறிவிட்டார் என்று அதிர்ச்சியடைந்தனர்.

எனவே உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தயாராக நின்று, விமானம் தரை இறங்கியதும், அவரை கைது செய்தனர்.

அ வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தற்போது அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். உலக நாடுகள் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் விமானத்தில் பயணம் செய்ய கொரோனா இருப்பது தெரிந்தும் ஒரு நபர் ஏமாற்றியுள்ளார் என்றால் இவரது பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .