கொரோனாவால் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்த அவலம்
கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணின் உடல் பொதுமக்கள் எதிர்ப்பால் தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதை அவலம். இதயத்தை இருகச்செய்யும் காட்சி.
வேலூர் மாநகராட்சி தோட்டப்பாளையம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரோசி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மே-16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் முழு பாதுகாப்புடன் ரோசியின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ரோசியின் குடும்பத்தினர் முதலில் வேலூர் ஓல்டுடவுனில் வசித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையம் வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். எனவே ரோசியின் உடலை ஓல்டுடவுனில் உள்ள சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கொரோவினால் உயிரிழந்தவரின் உடலை புதைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது வரை இங்கு கொரோனா நோயாளிகளின் உடல்கள் புதைக்கப்படவில்லை. எனவே உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க வேண்டும் என் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ரோசியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பின்னர் வேலூர் பாலாற்றங்கரையோரம் அரசு விதியின்படி மீண்டும் புதைக்கப்பட்டது. இதனால் ஓல்டுடவுன் பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் காணப்பட்டது.
கொரோனா நோய் தொற்றால் இறந்தவரின் உடல் போதிய பாதுகாப்பின்படியே அடக்கம் செய்யப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவும் என இதுவரை உலகலாவிய அளவில் அதிகாராபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனையடுத்தே கொரோனாவால் உயிரிழப்போர் 12 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டும் அல்லது எரியூட்டப்பட்டும் வருகின்றனர். தங்கள் பகுதியை சேர்ந்த பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பின் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது உடலை தோண்டி எடுத்து மற்றோரு இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ காட்சியும் பார்க்க நொஞ்சை இருகச்செய்கிறது.
இத்தகைய செயல் செயல் மக்களின் அறியாமையையும், மனிதாபிமானம் இல்லாதது, விழிப்புணர்வு இல்லாததையுமே காட்டுகிறது.