பும்ராவின் துல்லியமான பந்தில் சிக்கிய தென்னாப்பிரிக்க வீரர் - கிண்டல் செய்த ரசிகர்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26 ஆம் தொடங்கிய இப்போட்டியில் ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
— Addicric (@addicric) December 29, 2021
இதனையடுத்து 129 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அந்த அணி வீரர் மகாராஜ் பும்ராவின் துல்லியமான யார்கரில் ஆட்டமிழந்ததை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தான் எப்பவும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை பும்ரா நிரூபித்து காட்டுவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.