வாயை கொடுத்து வாங்கி கட்டிய இங்கிலாந்து வீரர்கள் - ஜாகீர்கான் கிண்டல்
2வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் பும்ராவிடம் வாக்குவாதம் செய்யாமல் இருந்திருக்கலாம் என முன்னாள் இந்திய அணி வீரர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய, 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் 2வது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீதிருந்த கோபத்தில் அடிக்கடி வாக்குவாதம், தவறான முடிவுகளை எடுத்து தோல்விக்கு பல காரணங்களை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு கூட கைப்பற்ற முடியாமல் திணறிய பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தேவையில்லாமல் அவரை கொம்பு சீவி விட்டு தக்க பதிலடியை இங்கிலாந்து வீரர்கள் தங்களுக்கு தாங்களே வாங்கி கட்டிக்கொண்டதாக ஜாகீர்கான் கூறியுள்ளார்.
மேலும் இதே கோபத்தில் பும்ராவால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்றும், இங்கிலாந்து வீரர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்யாமல் இருந்திருக்கலாம் எனவும் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.