அடேங்கப்பா..ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த இளம் வீரர் : குவியும் பாராட்டு!

Jasprit Bumrah Mumbai Indians
By Swetha Subash May 22, 2022 06:52 AM GMT
Report

மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் டெல்லி அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது.

அடேங்கப்பா..ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த இளம் வீரர் : குவியும் பாராட்டு! | Bumrah Takes Over Harbajan With Highest Wickets

அதேசமயம் மும்பை அணியின் வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

மும்பை அணியின் இஷான் கிஷன் 48 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 11 பந்தில் 34 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-வது இடத்திற்கு முன்னேறியது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 4-வது அணியாக பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்நிலையில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

அடேங்கப்பா..ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த இளம் வீரர் : குவியும் பாராட்டு! | Bumrah Takes Over Harbajan With Highest Wickets

195 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் மலிங்கா உள்ள நிலையில், 147 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது 148 விக்கெட்டுகள் கைப்பற்றி ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார் பும்ரா. இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார் பும்ரா.