டி20 போட்டிகளில் பும்ரா செய்த மகத்தான சாதனை - குவியும் பாராட்டு
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் அணிகள் எது என்று தெரியாத வகையில் அணிகளுக்குள் பலத்த போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே நேற்று மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் 250 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 223 விக்கெட்களுடன் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 2வது இடத்தில் உள்ளார். ஆனால் 250 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவுக்கு 5வது இடமே கிடைத்துள்ளது. அதற்கு முன்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் (274), யுஸ்வேந்திர சாஹல் (271), பியூஷ் சாவ்லா (270), அமித் மிஸ்ரா (262) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.