ரோஹித் சர்மா பற்றி டாஸில் பும்ரா சொன்ன அந்த விஷயம் - என்ன பிரச்சனை!
ரோஹித் சர்மா பற்றி டாஸில் பும்ரா சொன்ன தகவல் வைரலாகி வருகிறது.
5வது டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா மீண்டும் கேப்டனாகியுள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித்துக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ரா பேட்டி
இன்றைய டாஸில் வென்ற பும்ரா, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து அவர் ஆடும் லெவன் குறித்து பேசுகையில், “எங்கள் கேப்டன் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் ஓய்வெடுப்பதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் எங்கள் கேப்டன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.
இது அணியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. சுயநலம் இல்லை. அணியின் நலன் எதுவாக இருந்தாலும் அதைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இன்று அணியில் இரண்டு மாற்றங்கள். ரோஹித் ஓய்வு. அவருக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காயம் காரணமாக ஆகாஷ் தீப் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.