கிரிக்கெட் உலகில் மறக்கமுடியாக 4 வருடங்கள் - பும்ரா போட்ட பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Jaspritbumrah INDvSAF TeamINDIA
By Petchi Avudaiappan Jan 10, 2022 10:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அறிமுகமான பும்ரா தற்போது முன்னணி பவுலராக திகழ்ந்து வருகிறார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தொடங்கினார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து கேப்டவுன் நகரில் விளையாட இருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த நான்கு வருடத்தில் ஒரு வீரராகவும், ஒரு தனிநபராகவும் நான் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளேன். இங்கு வந்து விளையாடுவது என்னுடைய பழைய ஞாபகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இது மிகவும் ஸ்பெஷலான தருணம் என பும்ரா பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டிகளில் அவரை விளையாட வைக்க வேண்டாம் என்றும் தென்னாப்பிரிக்க தொடரில் தான் பும்ராவை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தான் நிர்வாகத்திடமும், கேப்டன் கோலியிடமும் கோரிக்கை வைத்து அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்ததாக ரவி சாஸ்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.