வாயால் வாங்கிக்கட்டிக்கொண்ட இங்கிலாந்து... இது தேவைதானா?
களத்தில் எதிர்ப்பவர்களுக்கு ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை இந்திய அணி வீரர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எப்படி இந்த போட்டி விறுவிறுப்பாக சென்றதோ அதே சமயத்தில் மைதானத்தில் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர் 2வது இன்னிங்ஸின் போது கேப்டன் விராட் கோலியிடம் வம்பிழுத்தார். இதனைத் தொடர்ந்து கடைசி நாளான இன்று இந்திய வீரர்கள் பும்ரா, ஷமி இருவரும், இங்கிலாந்தின் பட்லர், ஜோரூட் ஆகியோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட இந்திய அணி வீரர்கள் டிராவை நோக்கி சென்ற இப்போட்டியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளனர்.
Heat is on, Bumrah ???. #ENGvIND pic.twitter.com/ImuEAHiHAG
— Jon | Michael | Tyrion ?? (@tyrion_jon) August 16, 2021