100வது விக்கெட்டை பதிவு செய்த பும்ரா - கபில்தேவை பின்னுக்கு தள்ளி சாதனை

INDvsENG jaspritbumrah
By Petchi Avudaiappan Sep 06, 2021 06:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியா அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இரு இன்னிங்ஸிலும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஒலி போப்பின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது அவரது 100வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில், முன்னாள் ஜாம்பவான் கபில் தேவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 24 போட்டிகளில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ப்ராவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.