ஸ்டம்ப்பை பறக்க விட்ட பும்ரா.! இரண்டு முறை அவுட்டான பென் டக்கெட்!
ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சில் பென் டக்கெட்டை 2 முறை அவுட்டானது போட்டியில் சுவாரிஸ்யத்தை ஏற்படுத்தியது.
2 முறை அவுட்
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் (Ben Duckett) இந்திய வேகபந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சில் இரண்டு முறை அவுட்டாகினர்.
பும்ரா வீசிய பந்து பென் டக்கெட் காலில் பட்டது. நடுவரிடம் அவுட் கேட்டபோது அவர் அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால், இந்திய அணி DRS முறையில் review செய்யாமல் விட்டது. ஆனால், TV replay'வில் டக்கெட் LBW முறையில் ஆட்டமிழந்தது தெளிவாகவே தெரிந்தது.
பும்ரா review கேட்க ரோஹித் சர்மாவிடம் முறையிட , ரோகித் விக்கெட் கீப்பர் பரத்திடம் ஆலோசனை கேட்க அவர் review வேண்டாம் என்று மறுத்தார். TV replay கண்டு அதிருப்தி அடைந்த பும்ரா, ஆட்டக்களத்திலேயே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், மீண்டும் ஓவர் வீச வந்த பும்ரா, டக்கெட்டை கிளீன் போல்ட்டாக்கினார். டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா ஆக்ரோஷமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 316/6 ரன்களை எடுத்துள்ளது. Ollie Pope 148 ரன்களும், ரெகன் அகமது 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பும்ரா, அஸ்வின் 2 விக்கெட்டும், அக்சர், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.