பணம் தர மறுத்ததால் ஆத்திரம் - கடையை துவம்சம் செய்த திருநங்கை

Bullying
By Nandhini Apr 18, 2021 11:24 AM GMT
Report

பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியர்கள் பணம் தர மறுத்ததால் அங்கிருந்த பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்த கடைக்கு ஒரு திருநங்கை வந்தார். அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் பணம் கேட்டுள்ளார். உரிமையாளர் கடையில் இல்லாததால் தங்களால் பணம் தர இயலாது என்று கடை ஊழியர்கள் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபம் தலைக்கேறி அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டார். பின்னர் கைகளைத் தட்டியபடி மீண்டும் கடை ஊழியர்களிடம் சண்டையிட்டார். மறுபடியும் ஊழியர்கள் பணம் தராததால் மீண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி கீழே போட்டார்.

பணம் தர மறுத்ததால் ஆத்திரம் - கடையை துவம்சம் செய்த திருநங்கை | Bullying 

பொருட்களை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தி அங்கிருந்து வேகமாக வெளியே சென்றார். இந்த காட்சிகள் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.