மருமகனுக்கு புல்டோசரை திருமண பரிசாக கொடுத்த தந்தை : உத்தர பிரதேசத்தில் நூதனம்

By Irumporai Dec 18, 2022 12:31 PM GMT
Report

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக புல்டோசரை வழங்கியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது

புல்டோசர் பரிசு

உத்தரப் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மகளின் திருமண பரிசாக புல்டோசர் இயந்திரத்தை பரிசாக தந்துள்ளார். அம்மாநிலத்தின் ஹமீர்பூர் பகுதியில் வசிப்பவர் பரசுராம் பிரஜாபதி.

இவரின் மகள் நேகாவுக்கும் கடற்படை வீரரான யோகேந்திர பிரஜாபதிக்கும் சில நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. பொதுவாக திருமண பரிசாக மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கு ஆடம்பர காரை தந்தை பரிசாக வழங்குவார். ஆனால், பரசுராம் தனது மகளுக்கு புல்டோசரை பரிசாக தந்துள்ளார்.

மருமகனுக்கு புல்டோசரை திருமண பரிசாக கொடுத்த தந்தை : உத்தர பிரதேசத்தில் நூதனம் | Bulldozer As Wedding Gift To Daughter

வைரலாகும் பதிவு

இந்த விநோத பரிசை அந்த ஊர் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். இந்த பரிசு தொடர்பாக பரசுராம் கூறுகையில், தனது மகள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் மகள் தோல்வி அடைந்தால், இந்த புல்டோசர் மெசினை வைத்து வருமானம் ஈட்டு அவர் வாழலாம் எனக் கூறியுள்ளார்.