2022-ல இதெல்லாம் நடக்க போகுதா ? அதிர்ச்சி தரும் வங்கா பாட்டியின் கணிப்புகள்

Tsunami 2022 babavanga
By Irumporai Dec 27, 2021 10:45 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இன்னும் சில நாட்களில் 2021-ஆம் ஆண்டு முடிந்து 2022 புது வருடம் பிறக்க உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டுகளில் சில நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடிகளையும் பல உயிரிழப்புகளையும் சந்தித்தது.

தற்போது கொரோனா தாக்கம் குறையாத நிலையில், உலகம் 2022-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என கணித்து சொல்லியுள்ள பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள் என்ன சொல்கிறது .என பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.

பாபா வங்கா மூதாட்டி, கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 84-வது வயதில் இயற்கை எய்தினார். இருந்தாலும் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என அவர் கணித்து சொல்லியுள்ளார்.

அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது. இதில் குறிப்பாக கூறவேண்டும் என்றால் 9/11 அன்று அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குவார்கள் என முன்கூட்டியே அவர் கணித்திருந்த கணிப்புகளை, உதாரணமிட்டு காட்டுகின்றனர் அவரது ஆதாரவாளர்கள்.

மேலும் 2022-ஆம் ஆண்டும் எப்படி இருக்கும் என ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் 2021 ஆண்டில் குடிநீருக்கான பஞ்சம் அதிகரிக்கும். ஆறு மற்றும் ஏரி மாதிரியான நீர் நிலைகள் மாசடைந்து வருவது இதற்கு காரணமாக இருக்கும் என கூறியுள்ளது.

மேலும், பெரும்பாலான மக்கள் மாற்று வழியில் அதற்கான தீர்வை காண முயற்சிகளை முன்னெடுப்பார்கள். வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கும். வெப்பநிலையில் காணப்படும் மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தாக்கக்கூடும்.

பெரும்பாலான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா வெள்ளத்தில் சிக்கக்கூடும். மக்களின் டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையில் குழப்பம் ஏற்படும். மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்' என பாபா வங்கா பாட்டி கணித்துள்ளதாக ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் தெரிவித்துள்ளது.