மக்களை ஏமாற்றிய பட்ஜெட்; மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் அறிவிப்பு எங்கே? - சீமான் கேள்வி

Naam tamilar kachchi M K Stalin Government of Tamil Nadu Seeman Tamil Nadu Budget 2023
By Thahir Mar 21, 2023 02:39 AM GMT
Report

மாதம் மாதம் மின்கணக்கீடு செய்து மின்கட்டணம் செலுத்தும் முறை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாக்கல் செய்தார்.

Budget that cheated people - Seaman Review

இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட குடும்பத்தலைவிக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகியது.

மேலும் மதுரை மற்றும் கோயம்புத்துார் மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சீமான் விமர்சனம் 

இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் நிறை குறைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பட்ஜெட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எந்தவித அறிவிப்பும் இல்லை.

Budget that cheated people - Seaman Review

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. மதுக்கடைகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்த்த திட்டமிட்டுள்ளதை விமரிசித்த சீமான்,

மாதம் மாதம் மின்கணக்கீடு செய்து மின்கட்டணம் செலுத்தும் முறை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று கூறியிருந்தார்.