மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் - மகளிருக்கு ரூ.1000 குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
Government of Tamil Nadu
Chennai
By Thahir
மார்ச் 20 ஆம் தேதி 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தாக்கலாகிறது பட்ஜெட்
இது குறித்து தமிழக அரசு வெளியான செய்தி குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்தக் கூட்டம் 2023- ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 20-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009,
தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.
மேலும் அன்று காலை 10.00 மணிக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவை அளிக்கப்பெறும் என குறிப்பிட்டுள்ளது.