2025-2026 தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - வெளியாக உள்ள புதிய அறிவிப்புகள்!
2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட்
தமிழ்நாடு சட்டபேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.
2025-26-ம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக பட்ஜெட் உரை சென்னையில் 100 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 936 இடங்களில் பெரிய டிஜிட்டல் திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.