மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன?

Tamil nadu Budget 2026 TVK
By Vinoja Aug 05, 2026 04:38 PM GMT
Report

2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். இதில், ‘வெற்றி’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய திட்டங்கள் 

அதன்படி, திருமணமாகும் பெண்களுக்கு ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும்.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? | Budget 2026 Gold For Women Cycles For Students

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும்.

மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘வெற்றி மடிக்கணி’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பாடவேளை கட்டாயமாக இடம்பெறும்.

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ‘வெற்றி வீடு’ திட்டத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான வீட்டு உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருவுற்ற பெண்களுக்கான ‘தாய் கேர்’ சேவை மற்றும் உதவி மையங்களை அமைக்க 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.