பட்ஜெட்டில் பெயர் இல்லைனா கூட்டத்தை புறக்கணிப்பீங்களா ?- தமிழிசை கேள்வி
ஆந்திரா, பிகாருக்குச் சலுகைகள் வழங்குவதில் என்ன தவறுஉள்ளது
பட்ஜெட்டை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,'' அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பட்ஜெட் இது; ஒருசாராருக்கு மட்டுமானது எனக் கூறுவது மிக மிகத் தவறு;
நிதியுதவி
ஆந்திரா, பிகாருக்குச் சலுகைகள் வழங்குவதில் என்ன தவறுஉள்ளது ?; பின்தங்கிய மாநிலமான ஆந்திராவிற்கு நிதியுதவி செய்வதில் என்ன தவறு; பிகாருக்கு ஒரு மருத்துவக் கல்லூரிதானே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் இல்லை என்று கூறுவதை ஏற்கவே முடியாது;
நாட்டின் உட்கட்டமைப்பு நிதி என்றால் அதில் தமிழ்நாடு வராதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் முத்ரா கடன் உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழர்களும் தான் பயன்பெறுவர் என்று தெரிவித்த அவர் பலன்கள் மக்களை நேரடியாக சென்று சேரும் வகையில் பட்ஜெட் உள்ளதாக தெரிவித்தார்.
பட்ஜெட்
ஆனால் திமுக அதன் கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன; தமிழக நலனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் புறக்கணிக்கிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,'' தமிழக மக்களை பட்ஜெட்டில் எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை; நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணிக்கக் கூடாது என்றும் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு ஏன் உறவு பாராட்ட மறுக்கிறது.
மாநிலத்தின் பெயர் இல்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதா?; காங்., தேர்தல் அறிக்கை வெறும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கும்; நல்லவற்றை எங்கிருந்து எடுத்துக்கொண்டால் என்ன? என்று கேட்ட அவர் ,''செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்ததை மற்ற மாநிலங்கள் எதிர்க்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்