பட்ஜெட் 2023:தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன?

Smt Nirmala Sitharaman
By Irumporai Feb 01, 2023 04:51 AM GMT
Report

மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்படவுள்ளது, இதனை மத்தியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் இன்று தாக்கல் செய்கின்றார், தற்போது பட்ஜெட் குறித்து கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து காணலாம்

நிதி பற்றாக்குறை 

பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடு சிறு குறு தொழில்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தொழில் தொடங்க எளிய முறையில் கடன் கிடைக்கக்கூடிய வகையிலான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்ஜெட் 2023:தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget 2023 Nirmala Tamilnadu Expectation

புலம் பெயர் தொழிலாளர்கள்

நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை என்பது மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. மாநில தொழிற்சங்கங்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையே தொடர்ந்து ஒரு கருத்து வேறுபாடு சூழல் இருக்கும் நிலையில், அரசு புதிய திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

தங்கம் விலை குறையுமா

இந்தியாவிலேயே தங்கம் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சமீப நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 மருத்துவ சலுகை கிடைக்குமா

தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் பட்சத்தில் சவரனுக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் நூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெறுவதற்கு சாலை போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது தொழில் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.