உளவு பார்க்க சதி செய்யும் இலங்கை ? : கச்சதீவில் முளைத்த திடீர் புத்தர் .. உச்சகட்ட கோபத்தில் இந்தியா

Sri Lanka Parliament India
By Irumporai Mar 27, 2023 04:08 PM GMT
Report

கச்சத்தீவில் புதியதாக கட்டப்பட்ட புத்தர் சிலை இந்தியா - இலங்கை இடையே ,பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

கச்சத்தீவு  

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் ,இலங்கை நெடுந்தீவிலிருந்து 8கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு . 1913 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் ஓலைக்குடாச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை ,தொண்டியை சேர்ந்த சினிக்குப்பன் ஆகியோரால் ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் கோயில் கச்சத்தீவில் கட்டப்பட்டது .

உளவு பார்க்க சதி செய்யும் இலங்கை ? : கச்சதீவில் முளைத்த திடீர் புத்தர் .. உச்சகட்ட கோபத்தில் இந்தியா | Buddha Statue In Katchatheevu Of Sri Lanka

புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து தங்களை காப்பாற்றவும் ,பெருமளவு மீன்கள் கிடைக்கவும் ,இக் கோயிலில் மீனவர்கள் வழிபாடு நடத்துவது நடைமுறையில் இருந்து வந்துள்ளது . ராமநாதபுரம் சேதுபதி மன்னர்ககளுக்குச் சொந்தமான கச்சத்தீவை மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் ,மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தியுள்ளார்கள் . 

 இந்திய -இலங்கை ஒப்பந்தம்  

1974-ல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி ,இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ,கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது ,இந்த ஒப்பந்தத்தில் இந்தியர்கள் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டது . இந்தநிலையில் ,இலங்கை அரசு சார்பில் 2016- ம் ஆண்டு கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது ,இது சர்ச்சையை ஏற்படுத்தியது ,மேலும் ,சிங்கள மொழியில் கும்பாவிஷேகம் நடபெற்றது .

இது இந்திய பக்கதர்களை கொந்தளிப்படையவைத்தது . இதனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத்தொடங்கியது .தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்கும் .அ திமுக ,திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலிவுறுத்திவருகிறார்கள்  

புனித அந்தோணியார் கோயில் திருவிழா  

இந்நிலையில் நடப்பாண்டு கச்சத்தீவு திருவிழா மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது ,இதில் தமிழகத்திலிருந்து 3,500 பக்தர்களும் இலங்கையிலிருந்து 4,500 பக்கதர்களும் பங்கேற்றனர் திருவிழா நடந்து ஒரு மதம்கூட நிறைவடையாத நிலையில் கச்சத்தீவில் திடீரென ஒரு புத்தர் கோவில் கட்டப்பட்டிருப்பது இரு நாட்டுகளைச் சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது .

இலங்கை தமிழ் தேசிய கூட்டமை எதிர்ப்பு   

 இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் , கச்சத்தீவில் திடீரென புத்தர் கோயில் ,முளைத்தது எப்படி ,கச்சத்தீவில் அந்தோணியார் கோயில் மட்டுமே காலம் காலமாக இருந்து வந்த நிலையில் புத்தர் கோயில் கட்ட அனுமதி கொடுத்தது யார் ?"..என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் . 

 பௌத்த மயமாக்கல்  

மேலும் ," வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துள்ள இலங்கை படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது ,அங்கே பெரிய புத்தர் சிலையை கட்டியுள்ளது . இலங்கையில் 74 சதவிதம் உள்ள சிங்களவர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள் ,பெரும்பான்மையாகவுள்ள அவர்கள் சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் .

உளவு பார்க்க சதி செய்யும் இலங்கை ? : கச்சதீவில் முளைத்த திடீர் புத்தர் .. உச்சகட்ட கோபத்தில் இந்தியா | Buddha Statue In Katchatheevu Of Sri Lanka

மேலும் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக சீனாவுடன் கைகோர்த்து ஏதேனும் திட்டமிட்டிருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும் . அந்த புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . " எனக் கடுமையாக விவாதம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது . இந்த நிலையில் ,கச்சத்தீவில் புத்தர் கோயில் அமைக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் . 

 இலங்கை கடற்படையினர் மறுப்பு  

இது தொடர்பாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் கயான் விக்ரம சூர்யா கூறிய அறிக்கையில் ,கச்சத்தீவில் எந்த மதத்தையும் புண்படுத்து நோக்கில் புதியதாக புத்தர் சிலை எதுவும் அமைக்கவில்லை .ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது ,என தெரிவித்துள்ளார் .

ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் சகாயம் ,கூறுகையில் கச்சத்தீவில் புத்தர் சீலை அமைக்கப்படவில்லை என்றால் ,தமிழகம் மற்றும் இலங்கை அரசு பத்திரிக்கையில் வரும் புத்தர் சிலை எங்கு உள்ளது ,இது குறித்து அந்நாட்டு அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .