இந்தியாவில் சில நகரங்களில் விரைவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் BSNL

By Sathya Mar 26, 2025 09:47 AM GMT
Report

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அடுத்த சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.

BSNL 5G சேவை

BSNL நிறுவனமானது அடுத்த சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதனால், இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.

அதாவது, தனியார் நிறுவனங்களை விட மலிவான கட்டணத்தில் அதிவேக இணையை சேவையை வழங்கும்.

BSNL ஏற்கனவே, டெல்லியில் 5ஜி (5G SA) சோதனை செய்து வருகிறது. தற்போது, சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து Network-as-a-Service (NaaS) மாதிரியின் கீழ் 5G நெட்வொர்க் வழங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதை BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (CMD) ராபர்ட் ரவி உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் சில நகரங்களில் விரைவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் BSNL | Bsnl To Soon Launch 5G Services In Some Cities

அவர் கூறுகையில், " 'நாங்கள் Network-as-a-Service (NaaS) மூலம் டெல்லியில் 5ஜி நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்க முயற்சிக்கிறோம். இதுவே எங்களுடைய இலக்கு" என்றார்.

தற்போது BSNL, இந்தியா முழுவதும் 80,000 -க்கும் மேற்பட்ட டவர்களை நிறுவிய நிலையில், 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறது.

இதன் பிறகு தான் நிறுவனம் 5G சேவைகளை தொடங்கும். இதில், 5G தளங்களில் 50% வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.