‘Flying Moon Jump’ போட்டியில் சாதனைப் படைத்த BSF நாய் - வைரலாகும் வீடியோ...!
எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) நாய் இன்று தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது.
வைரலாகும் வீடியோ
எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) நாய் ஒன்று ‘ஃப்ளையிங் மூன்’ ஜம்பில் பட்டையை கிளப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள என்.டி.சி.டி., பி.எஸ்.எஃப்., பயிற்சியின் போது இந்தச் சாதனையை அந்நாய் நிகழ்த்தியது.
'ஃப்ளையிங் மூன் ஜம்ப்' போட்டியின் போது, பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆண் மலினோயிஸ் 15 அடி 6 அங்குல உயரத்தில் குதித்து தன்னுடைய சாதனையை முறியடித்துள்ளது.
இந்த குதித்தலின் நோக்கம், எதிரில் அமர்ந்திருக்கும் / உயரத்திலிருந்து குறி வைத்து ஆயுதங்களைத் திசைதிருப்பி எடுப்பதாகும்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

NTCD BSF:
— Charanjit Singh (@SinghCharanjit_) February 15, 2023
Flying Moon jumps 15.5 feet pic.twitter.com/VwaOFe9EL3