இளமையை தக்க வைக்க ஒரு நாளுக்கு ரூ.16 கோடி செலவு - 46 வயது கோடீஸ்வரனின் சம்பவம்!
தனது இளமையை தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படும் 46 வயதான அமெரிக்க தொழிலதிபர்.
என்றென்றும் இளமை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்தவர் தொழிலதிபரான பிரையன் ஜான்சன். இவர் மூளையின் செயல்பாட்டை கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான kernal என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
சுமார் 3300 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ள ஜான்சன் உலக பணக்காரர்களில் 46வது இடத்தில் இருக்கிறார். 46 வயதான ஜான்சன் தனது உடலை எப்போதுமே இளமையாக வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல வேண்டும் என்று லட்சியத்தை வைத்துள்ளார். தனது உடல் உறுப்புகளை 18 வயதுடைய உறுப்புகளைப் போல் வைத்துக் கொள்வதை குறிக்கோளாக வைத்துள்ளார்.
இதற்காக அவர் கொலாஜன் ஸ்பெர்மிடின் கிரியேட்டின் போன்ற பொருட்கள் நிரம்பிய கிரீன் ஜெயின்ட் (green gaint) smoothie என்று அழைக்கப்படும் பானத்தோடு தனது நாளை தொடங்குகிறார். தனது உணவில் பெரும்பாலும் பச்சை காய்கறிகள் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். குறிப்பாக தனது இளமையை தக்க வைத்துக் கொள்ள தினமும் 110 மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்.
பிரையன் ஜான்சன்
உடல் அதிரக்கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தனது சொகுசு காரை இயக்குகிறார். வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் பணத்தை அவர் இதற்காக செலவு செய்து வருகிறார்.
இதற்காக அவரை சுற்றி தனி மருத்துவக் குழு ஒன்றும் செயல்படுகிறது, தினமும் அவரது முன்னேற்றத்தை கண்காணிக்க அதிநவீன மருத்துவ சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர். தனது 18 வயது மகனின் ரத்தத்தை ஜான்சன் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். தனது இளமையை பேணி காப்பதற்காக ;20 மேற்பட்ட கருவிகளை, உடலில் பொருத்தி கண்காணிக்கும் இவர் இதற்காக 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவையும் வைத்திருக்கிறார். இரவு நேரத் தூக்கத்தின் போது தனது ஆணுறுப்பில் ஜெட் பேக் என்ற கருவியை அவர் இணைத்துக் கொள்கிறார்.
இந்த கருவி இரவு நேர விறைப்பு தன்மையை கணக்கிட உதவுகிறது. இவை தவிர தனது மூளையின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ரெட் லைட் பொருத்தப்பட்ட ஒரு தொப்பியை பயன்படுத்துகிறார். ஜான்சன் தனது டீனேஜ் மகனுடன் ரத்தத்தை மாற்றிக் கொண்டார். ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்கிறார்.
தற்போது 46 வயதாகும் தான் இப்போது 18 வயது இளைஞராக தன்னை உணர்வதாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் ஜான்சன். மேலும், இந்த கோடீஸ்வர தொழிலதிபர். தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளும் முயற்சிக்காக தினமும் 16 கோடி ரூபாய் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.