பாக்குகளை திருடியதாக கூறி 16 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்

Boy Karnataka On Brutal Attack
By Thahir Nov 05, 2021 02:48 PM GMT
Report

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்ரமண்யா போலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குத்திகார் கிராமத்தில் பாக்கு தொட்டம் ஒன்று உள்ளது.

இந்த தோட்டத்தில் அடிக்கடி திருடு போவதாக இடத்தின் உரிமையாளர் அப்பகுதி இளைஞர்களிடன் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாக்கு தோட்டத்தில் பாக்குகளை திருடியதாக கூறிப்படுகிறது.

இதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர், அந்த சிறுவனை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கொடுத்தப் புகாரின் பேரில்,

வழக்கு பதிவு செய்த சுப்பிரமண்யா போலிஸார் இது சம்பந்தமாக தாக்குதல் நடத்திய 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதல் நடத்திய அந்த பகுதியை சேர்ந்த 10 இளைஞர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். இது சம்பந்தமாக சுப்ரமண்யா போலீசார் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய வீடியோ தற்போதுசமூகவளைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.