மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல் - வைரலாகும் வீடியோ காட்சி..!
உத்தர பிரதேசத்தில் சாலையில் மூன்றுசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஒரு கணவனும் மனைவியும் கட்டையால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஜேவரில் கடந்த ஞாயிற்று கிழமை கஜேந்திர என்ற மாற்றுதிறனாளி ஒருவர் தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த தம்பதி ஒன்று சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கியது.
கணவன் ஜுகேந்திரன் என்பவரும் அவரது மனைவியும் கையில் பெரிய கட்டையை வைத்துக்கொண்டு தாக்கத் தொடங்கின.
மேலும் அந்த தம்பதி மாற்று திறனாளியின் வாகனத்தை அடித்து நொறுக்கின. அப்போது கஜேந்திரா இறங்கி நிலைதடுமாறிய போதும் அந்த தம்பதி தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் தாக்கிய தம்பதியும்,மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஜுகேந்திரன் தனது பள்ளியை கஜேந்திரனுக்கு குத்தகைக்கு விட்ட நிலையில் கொரோனா காரணமாக கஜேந்திரன் பள்ளியை மூடியதால் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜுகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.