சாதாரண பெண்ணை மணந்த இளவரசர் - ஜொலிக்கும் 1788 அறைகள் கொண்ட அரண்மனை!

Marriage World
By Jiyath Jan 15, 2024 07:41 AM GMT
Report

புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் 

புருனே நாட்டின் மன்னரும், மிகப்பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 6-வது மகன் தான் இளவரசர் அப்துல் மாதின்.

சாதாரண பெண்ணை மணந்த இளவரசர் - ஜொலிக்கும் 1788 அறைகள் கொண்ட அரண்மனை! | Bruneis Prince Marries Common Women

இவர் ஹெலிகாப்டர் பைலட்டாக புருனே விமானப்படையில் பணியாற்றி வருகிறார். அத்துடன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனே நாட்டிற்காக போலோ விளையாட்டிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் 32 வயதான இளவரசர் அப்துல் மாதின், 29 வயதான தனது காதலி அனிஷா ரோஸ்னா இசா-கலேபிக்கை கரம்பிடித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், அரச வம்சாவளி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் அவர் திருமணம் செய்துள்ளார்.

நிகழ்ச்சிகள் 

மேலும் அனிஷா ரோஸ்னா, புருனே சுல்தானின் சிறப்பு ஆலோசகரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. பந்தர் செரி பெகவானில் உள்ள தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இஸ்லாமிய முறைப்படி இந்த திருமணம் நடந்தது.

சாதாரண பெண்ணை மணந்த இளவரசர் - ஜொலிக்கும் 1788 அறைகள் கொண்ட அரண்மனை! | Bruneis Prince Marries Common Women

இந்த திருமண விழா ஜனவரி 7-ம் தேதி தொடங்கி ஜனவரி 16-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான நிகழ்ச்சிகள் சுமார் 1788 அறைகள் கொண்ட அரண்மனையில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இந்த அரசு குடும்ப திருமண விழாவில் பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.