புரூஸ்லீ மரணம்…50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் - ரசிகர்கள் சோகம்
பிரபல நடிகர் புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் புரூஸ் லீ
தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ம் ஆண்டு பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் ‘என்டர் தி டிராகன்' உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இவருடைய படங்களில் பெரும்பாலும் தற்காப்புக் கலை மேம்படுத்தினார். 1973-ம் ஆண்டு தன்னுடைய 32-வது வயதில் பெருமூளை வீக்கம் காரணமாக உயிரிழந்தார். அப்போது, வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புரூஸ்லீ மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், புரூஸ் லீ மரணமடைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் புரூஸ் லீ ‘ஹைபோநட்ரீமியா’ காரணமாக இருக்கலாம் என்று ஸ்பெயின் நாட்டின் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புரூஸ் லீ உடலிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமல் அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அந்த ஆய்வில் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இத்தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
சிறுமிகள் மீது அத்துமீறல் : இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவிற்கு அவுஸ்ரேலியாவில் 13 வருட சிறை IBC Tamil