நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள் - வீடியோ வைரல்!

London
By Swetha Subash Jun 03, 2022 05:39 AM GMT
Report

கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில் பயணித்த சகோதரர்கள் இருவர் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் இருந்து கிரீஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் என்ற 2 சகோதர்கள் பயணித்தனர். அப்போது நடுவானில் அவர்கள் இருவரும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர்.

இவர்களின் சண்டையில் விமானம், கொர்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சண்டை காட்சியை சக பயணிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிரவே அது தற்போது வைரலாகி வருகிறது.