திருமணமான அக்காவுடன் கள்ளத் தொடர்பு - இளைஞரை வெட்டி படுகொலை செய்த தம்பி ..!

Tamil Nadu Police Death Chengalpattu
By Thahir Jun 20, 2023 06:12 AM GMT
Report

தனது திருமணமான அக்காவுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞரை தம்பி வெட்டி படுகொலை செய்தார்.

இளைஞர் படுகொலை 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்காவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு என்ற 28 வயது வாலிபர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

brother who killed the person

இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

கள்ளத்தொடர்பால் நிகழ்ந்த விபரீதம் 

காவல்துறையின் விசாரணையின் மூலம் மணிகண்டன் என்ற 22 வயது வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறையிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள மணிகண்டன் "திருநாவுக்கரசு திருமணமான தனது அக்காவுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் அவரை பல முறையை எச்சரித்திருக்கிறார். எச்சரித்தும் கேட்காததால் படுகொலை செய்ததாக தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.