இருட்டு அறையில் ஒளிந்து கொண்ட குழந்தை... பாட்டுப்பாடி கண்டுபிடித்த அண்ணன்... - வைரலாகும் வீடியோ!
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அண்ணனும், இரண்டை வயது சிறுமியும் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள்.
அண்ணன் கண்ணை மூடிக்கொண்டு எண்களை எண்ண, குழந்தையின் கையைப் பிடித்து தந்தை கொண்டு சென்று இருட்டு அறையில் ஒளிய வைக்கிறார்.
சிறுவன் வீடு முழுக்க தேடியும், தங்கையை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே, அண்ணன் ஜானி... ஜானி.. என்று பாட... ஒளிந்துக் கொண்டிருந்த குழந்தை எஸ்.பாப்பா என்று பாடியது.. உடனே, அண்ணன்.. தங்கை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடுகிறான்.
இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விடுகிறார்கள்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன அழகு... ஒரு நிமிடம் என்னையே மறந்து சிரித்துவிட்டேன்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த க்யூட் வீடியோ -
cute ❤️? pic.twitter.com/6aV4C5fvmB
— black cat (tribal) (@Cat__offi) October 4, 2022