இது என் அண்ணன் சீமானுக்காக!... கனடாவிலிருந்து உருக்கமாக பேசிய தமிழர்
சீமான் குறித்தும் தேர்தல் தொடர்பாகவும் கனடா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மத்தியிலும் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல செல்வாக்கும் ஆதரவும் உள்ளது.
இந்த நிலையில் சீமானின் தேவை நாட்டிற்கு முக்கியம் என கனடா நாட்டின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், என் வீடு நன்றாக இருக்க நான் என் பெற்றோருக்கு பணம் தருவேன். அது போல என் நாடு நன்றாக இருக்க வேண்டும், அதற்காக என் அண்ணன் சீமானுக்கு தான் பணம் தருகிறேன்.
என் வீட்டு நலனிற்காக என் தந்தைக்கு பணம் கொடுப்பதுபோல...,
— சீமான் கார்த்திக்ᴺᵀᴷ (@NaamTamilar_) March 8, 2021
என் நாட்டின் நலனிற்காக எங்கள் அண்ணன் #சீமானிற்கு பணம் தந்து அவன் கரத்தை நாங்கள் வழுப்படுத்துகிறோம்- கனடா நாட்டின் #நாம்தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர்.#வெல்லப்போறான்விவசாயி#NTK4Tamilnadu #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் pic.twitter.com/ouhldl6Qrf
நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறேன். இது என் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருக்கும் தெரியும். அது எங்கு செல்வாகிறது என்பதும் தெரியும், இதை அண்ணன் சீமான் பலமுறை மேடையில் சொல்லியிருக்கிறார். எங்களின் ஏக்கம் என்வென்றால் என்றாவது எங்கள் நாட்டிற்கு போய் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இது ஒரு வலி, எங்கள் வலியை சரிப்படுத்த இங்கு எங்கள் அண்ணன் சீமான் ஒருவர் தான் இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் அவர் கரத்தை வலுப்படுத்துகிறோம். இங்கு பல கட்சிகள் சுரண்டி எடுக்கிறது.
திமுக கட்சியெல்லாம் தேர்தல் நிதி என்றே வெளிப்படையாக வசூலிப்பார்கள்.
நாங்கள் தேர்தலுக்காக எங்கள் அண்ணன், அக்கா, தங்கை நிற்கும் போது உதவி செய்யக்கூடாதா என கூறியுள்ளார்.