முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தூக்கிலிட்டு கொன்ற தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தாலிபான்கள் தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு , ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
நாளை அந்த அமைப்பினரின் பிரதமர், துணைபிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய புதிய அரசு பதவியேற்க உள்ளது.
இந்நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவின் சகோதரர் ரோஹுல்லா அஸிஸி தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர்.
மேலும் அவரது உடலை அடக்கம் செய்ய தர மறுத்த தலிபான்கள் ரோஹுல்லா அஸிஸியின் உடல் அழுகி போகட்டும் என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.