சொத்துப் பிரச்சினையில் அண்ணனின் கழுத்தை காலால் இறுகி கொலை செய்த கொடூரத் தம்பி - அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு 4 தம்பிகள், 2 தங்கைகள் இருக்கிறார்கள்.
இந்த குடும்பத்தில் அண்ணணுக்கும், தம்பிகளுக்கு இடையே சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால், சொத்தை அனைவருக்கும் பிரித்து கொடுக்கும்படி பழனிச்சாமியின் 4வது தம்பி சிவசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகில் வயல்வெளியில் சொத்துப் பாகப்பிரிவினை தொடர்பாக பழனிச்சாமிக்கு, சிவசாமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, சண்டையில் கோபமடைந்த சிவசாமி அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளினார். அப்போது, அண்ணனின் தலையை பிடித்து தரையில் மோதினார்.
பின்னர், தனது காலால் அண்ணனின் கழுத்தைப் போட்டு மிதித்து அழுத்தினார். காலால் எட்டி, எட்டி அண்ணனை உதைத்தார்.
இந்தத் தாக்குதலில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பியின் கொடூரச் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.