தங்கை மற்றும் கணவரை ஓட ஓட வெட்டிக் கொன்ற அண்ணன் - அதிர்ச்சி சம்பவம்!
தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஓட விரட்டி அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு
தூத்துக்குடி, அண்ணா நகர் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள். அதே பகுதியில் வசித்து வரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.
இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த
படுகொலை
தங்கையையும் வெட்டி படுகொலை செய்து தப்பியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.
மேலும், தனி பிரிவு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியில் தொடர் படுகொலை சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்களின் தங்கங்கள்.....! அரசின் முக்கிய அறிவிப்பு IBC Tamil
