அண்ணனையே காதலித்த தங்கை - குடும்பத்தினரின் தடையால் கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
ராஜஸ்தானில் தங்கை அண்ணனை காதலித்த சம்பவம் கடைசியில் விபரீத முடிவை ஏற்படுத்திய நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரன் சாதர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 20 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக சுற்றுவது வெளியில் ஒன்றாக போவது என இருந்துள்ள நிலையில் உறவினர் தானே என்று குடும்பத்தினர் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
ஆனால் நாளடைவில் இருவரும் காதலிக்கும் விஷயம் வெளியே தெரிய வர இரு வீட்டாரும் இந்த திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருவரும் ஒரே ஜாதி, ஒரே மதம்,உறவினர் என ஒற்றுமைகள் இருந்த போதும் சம்பந்தப்பட்ட இளைஞர் இந்த மாணவிக்கு அண்ணன் முறை என்பதே இதற்கு எதிராக அமைந்தது.
இந்நிலையில் இவர்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டில் அழுது புலம்பியுள்ளனர். ஆனால் நாளடைவில் நிலைமை சரியாகும் என இதனை இரு குடும்பத்தினரும் கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளனர்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.