உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இருந்து நியூசிலாந்தின் முக்கிய வீரர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
t20worldcup2021
Devon Conway
NZvAUS
By Petchi Avudaiappan
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வலுவான நிலையில் உள்ள இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரும் விக்கெட் கீப்பருமான டெவன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் கான்வேயின் பங்கும் உண்டு.
அவர் காயம் காரணமாக விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.