இதுதான் உண்மையான நாட்டுப்பற்று - மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு ரஷ்யாவுடன் போருக்கு சென்ற நபர்

ukraine vladimirputin UkraineRussianWar birdwatching UkraineUnderAttaсk
By Petchi Avudaiappan Mar 05, 2022 06:47 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் ரஷ்ய படைகளை எதிர்த்து மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு போருக்கு சென்றுள்ள சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

வடமேற்கு இங்கிலாந்து பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளுக்கு அப்பாவான இயன் பார்கின்சன் என்ற 60 வயது நபர் க்ரைனில் நடந்த சண்டையில் கலந்துகொள்வதற்காக தான் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் பறவைகளைப் பார்க்கச் செல்வதாக கூறி தனது மனைவியிடம் தெரிவித்ததாகவும், உண்மை தெரிந்தால்  அவர் பயப்படுவார் என்றும் பார்கின்சன் கூறியுள்ளார். 

நான் உக்ரைனில் இருக்கும்போது அவளுக்கு  போன் செய்து நிலைமையை விளக்குவதாக தெரிவித்துள்ள பார்கின்சன், தனக்கு ராணுவ அனுபவம் இருக்கும்போது, ​​தன்னால் உட்கார்ந்து பார்க்க முடியாது என உணர்ந்ததாக கூறியுள்ளார். 

தொடர்ந்து  குடும்பத்தில் கணவன் மற்றும் தந்தையாக செய்ய வேண்டியதை செய்துவிட்டதாகவும்,  போரில் தான் திரும்பி வராவிட்டாலும் பரவாயில்லை என பார்கின்சன் கூறியுள்ளார்.  இதனிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் உக்ரைனுக்கு போரிடச் செல்லும் பிரித்தானியர்கள், பிரித்தானிய சட்டத்தை மீறுவதாக கருதப்படலாம் என எச்சரித்துள்ளார்.