மெடிக்கல் மிராக்கிள்.. ஒரே நாளில் 6 முறை நின்றுபோன இதயத்துடிப்பு - போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

London United States of America
By Vinothini Oct 06, 2023 11:50 AM GMT
Report

 மாணவர் ஒருவருக்கு ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றது, மருத்துவர்கள் போராடி காப்பாற்றியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய மாணவர்

அமெரிக்கா, வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் ராவ் வசித்து வருகிறார். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கல்லூரியில் மருத்துவத்துக்கு முந்தைய பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தார்.

british-doctors-saved-indian-student-in-london

இவர் தனது கல்லூரியில் இருந்தபோது இவர் திடீரென நிலைகுலைந்து விழுந்தார். அவரது சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுது டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரலில் ரத்தம் உறைந்தது, அதனால் இதயத்துடிப்பு நின்றுபோனது தெரியவந்தது.

காப்பாற்றிய டாக்டர்கள்

இந்நிலையில், அவருக்கு ரத்தம் உறைவைத் தடுக்கும் மருந்துகளை கொடுத்து அவரை காப்பாற்ற முயன்றனர். சிகிச்சையின்போதே இவருக்கு 5 முறை இதயத்துடிப்பு நின்றுபோனது, அவரை போராடி காப்பாற்றினார்.

பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம்.. விழா நடத்தி கௌரவித்த நாடு? - ஆச்சரியம்!

பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம்.. விழா நடத்தி கௌரவித்த நாடு? - ஆச்சரியம்!

மேலும், அவருக்கு ஒரே நாளில் 6 முறை முறை இதய துடிப்பு நின்றுபோன போதும் டாக்டர்களின் அயராத முயற்சியால் அதுல் ராவ் உயிர் பிழைத்தது அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சமீபத்தில் லண்டன் மருத்துவமனைக்கு இவர் தனது பெற்றோருடன் வந்து தனது உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், அவர் லண்டனிலேயே தனது மருத்துவ படிப்பை தொடரப்போவதாக கூறினார்.