9000 கோடி மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வங்கிகளின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. பல ஆயிரம் கோடிகள் கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதில் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் லண்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.9000 கோடி மேல் கடன் வைத்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறினார். அவர் லண்டனில் தங்கியுள்ள செய்தி பின்னர் தெரியவந்து கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடந்த எந்த விதமான தடையும் இல்லையென்றும் அவரை நாடு கடத்தலாம் என்றும் பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் மல்லையாவையும் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை எதிர்த்து மேல்முறையீடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீரவ் மோடி வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நீரவ் மோடி மேல் முறையீடு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.