டின் டிண்ட டின் .. மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் 90’S கிட்ஸின் ஃபேவரைட் பிஸ்கட்..!

Irumporai
in பொழுதுபோக்குReport this article
மில்க் பிக்கிஸ் பிஸ்கெட்டை மீண்டும் கொண்டு வர வேண்டுமென ஒரு மில்லியன் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் தற்போது இந்த பிஸ்கெட்டின் விற்பனை மீண்டும் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
90 கள் மற்றும் 80களில்வந்த குழந்தைகளின் விருப்பமானது பிஸ்கட் மில்க் பிக்கீஸ் பிஸ்கட்கள் தான் .கொஞ்சம் பாலும் அதில் நனைத்து உண்ணும் மில்க் பிக்கீஸ் பிஸ்கட்கள் சுவையும் அலாதியானது.
கடந்த சிலவருடமாக சந்தையில் காணாமல் போன மில்க் பிக்கீஸ் மீண்டும் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டானியா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் :
தமிழகத்தில் உள்ள நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்துள்ளனர். இது தமிழகத்துடன் இணைந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்ட ஒரு பிராண்ட். இந்த காலங்களில், நாம் கடந்த காலத்தை இன்னும் அதிகமாக விரும்புகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு இணைய பிரச்சாரத்தின்போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மீண்டும் மில்க் பிக்கீஸை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆகவே மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கெட் தற்போது அதன் பழைய அசல் வடிவத்துடன் வெளிவருகிறது. பிரிட்டானியா என்ற எழுத்துகள் பிஸ்கட்டின் மையத்திலும், மலர் வடிவங்கள் பிஸ்கெட்டின் ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல அட்டையில் வழக்கமான பிஸ்கெட் பாட்டில் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த பிஸ்கெட்கள் அதே பால் சுவையுடனும் இருக்கும் என்றும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 65 கிராம் எடையுடைய இந்த பிஸ்கெட் பேக் ரூ.10 விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு 90 sமற்றும் 80 sகிட்ஸ்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.