பிரிட்டன் பிரதமரின் தந்தை செய்த செயல்.! அதிர்ச்சியில் போரிஸ் ஜான்சன்

britan-virush-corona-dead
By Jon Jan 01, 2021 01:36 PM GMT
Report

பிரிட்டன் இன்றோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால் போரிஸ் ஜான்சன் பிரதமரான பிறகு தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது.

முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக நடைபெற்ற தேர்தலிலும்கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என்றே ஸ்டான்லி வாக்களித்திருந்தார்.

இந்நிலையில், தான் பிரான்ஸ் குடிமகன் என்றும் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். "நான் இப்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். நான் ஒரு பிரெஞ்சு. என் அம்மா பிரான்சில் பிறந்தவர்.

அவரது தாயும் பாட்டியும் முற்றிலும் பிரெஞ்சுக்காரர்கள். எனவே, என்னைப் பொறுத்தவரை இது எனது உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதும் ஒரு ஐரோப்பியனாகவே இருப்பேன், அது நிச்சயம். பிரிட்டிஷ் மக்களிடம் நீங்கள் ஐரோப்பியர் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உறவு வைத்திருப்பதும் முக்கியமானது என கூறினார். மகன் போரிஸ் ஜான்சனே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனுக்கு எதிராக தந்தை எடுத்துள்ள முடிவு பெரும் பரபரப்பை கிளப்பையுள்ளது.