துப்பாக்கியுடன் வந்த இளைஞர்..ஒற்றை ஆளாக சமாளித்த ஆசிரியர்
பிரிட்டனில் உள்ள கல்லூரிக்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் சசெக்ஸியில் கிராலி என்ற கல்லூரி மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் ஒரு இளைஞர் துப்பாக்கியும் கத்தியுமாக நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் திடீரென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதனால் மைதானத்தில் இருந்த அனைத்து மாணவர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் ஒரு ஆசிரியர் அந்த இளைஞரை தனியாக போராடி தரையில் தள்ளி பிடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அந்த இளைஞர் நடையை தாக்குதலை கல்லூரி பணியாளர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாளாக ஆயுதத்துடன் இருந்த இளைஞரை மடக்கிப்பிடித்த ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil